பொங்கல் ரேஸில் ரிலீசுக்கு தயாராகியுள்ள ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் போட்டி போட்டு வருகின்றன. ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மாஸாக இருந்தது. ஆனால் இது ஏற்கனவே வந்த படம் போல உள்ளதே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இந்த படம் பகவத் கேசரியின் ரீமேக் ஆகும்.
அதே நேரத்தில், பராசக்தி படத்தில் இருந்து வெளியான ட்ரெய்லர் முற்றிலும் வித்தியாசமான கதைகளத்துடன் காணப்பட்டதால், இது எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகன் படத்தை பொருத்தவரையில், அது பக்கா அரசியல் கதைக்களமாக உருவாகியுள்ளது. இதில் இடம்பெற்ற வசனங்களும் காட்சிகளும் அதை நிரூபிக்கும் வகையில் காணப்பட்டிருக்கின்றன.

அதேபோல பராசக்தி படம் இந்தி திணிப்புக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள். டெல்லி தான் இந்தியாவா போன்ற வசனங்கள் ஹைலைட்டாக காணப்பட்டன.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலிலா ஆகியவர்கள் தற்போது கேரளாவுக்கு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ஏற்கனவே பராசக்தி படத்தின் ட்ரெய்லர் அதிக வியூஸ்களை அள்ளி முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!