தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனும் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை மற்றும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.
சமீபத்தில் நிகழ்ந்த கார்டாஸ்க் (Car Task), தற்போது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில், போட்டியாளர் சாண்ட்ரா, காருக்குள் இருந்த போது மற்ற போட்டியாளர்கள் பார்வதி மற்றும் கம்ருதீன் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்ற காட்சிகள் ஒளிபரப்பாகியதை பார்த்து, பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த காட்சிக்குப் பலர் அதிர்ச்சி மற்றும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இதனால் விஜய் சேதுபதி அவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார்.

இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வனிதா, இந்த சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வனிதா அதன்போது, “கெட்ட வார்த்தை பேசுறது.. எங்கட சீசன்லயும் நடந்திருக்கு. ஆனா, அதெல்லாம் வெளியில காட்டேல… லைவ் இருக்கும் போது ஒழுங்கா நடந்துக்கணும்… சாண்ட்ராவ எட்டி உதைக்கும் போது நான் மட்டும் உள்ள இருந்திருந்தால் ரெண்டத்தையும் இழுத்திட்டுப் போய் வெளியில அனுப்புங்கன்னு சொல்லி இருப்பேன். அவங்க ரெண்டு பேரும் பண்ணது தப்பு.” என்று கூறியுள்ளார்.
Listen News!