தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கலிற்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே ஒரு பெரிய சோகம் உருவாகியுள்ளது. படக்குழு தெரிவித்ததன்படி, யு/ஏ சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்தில், இந்த சான்றிதழ் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து, வழக்கை நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதி முக்கியமான கேள்வியை எழுப்பினார். “தை பிறந்தால் வழி பிறக்கும். ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஏன் ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளி வைக்கக் கூடாது?” என்று நீதிபதி கேட்டுள்ளார்.
இந்த கேள்வி, பட ரசிகர்களுக்குப் புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாக இருப்பது முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு பெரிய படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ள நிலையில், சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Listen News!