• Jan 07 2026

ஒரே நாளில் ஜனநாயகனை வீழ்த்திய பராசக்தி.! TRP யிலும் ட்ரெய்லரிலும் இமாலய வெற்றி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தியும், விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படமும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளன. இந்த படத்தின் ட்ரெய்லர்கள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பராசக்தி ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளதோடு இந்த படம் தற்போது 40 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தளபதி விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா ஒரே நாளில் ஜீ தமிழ் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில், அதிக பார்வையாளர்களை பெற்று  ஜனநாயகனை மிஞ்சிய டிஆர்பி மதிப்பீட்டில் பராசக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பான சன் டிவி முதல் இடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இளைய தளபதி விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படம் விஜய் நடிக்கும் இறுதி படமாக காணப்படுகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரும் ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் வெளியானது.

தற்போது பகவத் கேசரி படத்தின் ரீமேக்காக காணப்பட்ட ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களில் 3.8  கோடி  பார்வையாளர்களை கடந்துள்ளதாகவும், பராசக்தி திரைப்படம் வெளியான 24 மணி நேரத்தில் மட்டும் 4 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதுவரையில் அஜித், ரஜினி, விஜய் படங்களுக்கு கூட இல்லாத அளவிற்கு பராசக்தி படத்தின் ட்ரெய்லருக்கு கடந்த 24 மணி நேரத்தில் 40 மில்லியன் வியூஸ்கள் வந்து சாதனை படைத்துள்ளமை பெரும் பேசுப் பொருளாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement