சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவை தனியாக அழைத்து பேசிய ரோகிணி இன்னும் ஏழு நாட்களில் சொல்வது கஷ்டம் இன்னும் கால அவகாசம் தருமாறு கேட்க, இன்னும் ஏழு வருடம் போதுமா என்று மீனா விளாசுகின்றார்.
ஆனாலும் தான் முதலில் மனோஜிடம் சொல்வதாகவும் அதற்கு பின்பு குடும்பத்தாரிடம் சொல்வதாகவும் சொல்ல, அப்படி என்றால் நானும் முத்துவிடம் சொல்கின்றேன் என்று மீனா சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் ரோகிணியின் முதல் கணவரின் அண்ணன் முத்துவின் காரில் மீண்டும் சவாரிக்கு செல்லுகின்றார். இதன்போது தன்னை ஒரு ஸ்டூடியோக்கு அழைத்துச் செல்லுமாறு அவர் சொல்ல, முத்து தனக்கு தெரிந்த ஸ்டூடியோவுக்கு அழைத்துச் செல்கின்றார்.
அப்போது அவர் கல்யாணியின் திருமண போட்டோவை பிரேம் போட சொல்லுகின்றார். முத்து காருக்குள்ளே இருந்த போதும் அவருடைய போனுக்கு கால் வர, ஸ்டுடியோக்கு உள்ளே செல்கின்றார். இதன்போது எதிர்ச்சியாக ரோகிணியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்.

இது யார் என்று அவரிடம் கேட்கும் போது, இதுதான் என் தம்பியோட பொண்டாட்டி கல்யாணி என்றும், இவர்களுடைய பையன் தான் க்ரிஷ் எனவும் கூறுகின்றார். மேலும் கல்யாணி இப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு சென்னையில் தான் இருக்கின்றார் என்ற விஷயத்தையும் கூறுகின்றார். இதனால் இத்தனை நாட்களாக ரோகிணி ஏமாற்றிய விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்த்து கோபத்தின் உச்ச கட்டத்துக்கு செல்லுகின்றார் முத்து.
ரோகிணி பற்றிய உண்மை தெரிந்து கோபத்தில் வீட்டுக்கு வந்த முத்து, அனைவரையும் ஹாலுக்கு வரச் சொல்லுகின்றார். இதன்போது இத்தனை நாள் நம்ம எல்லாரையும் அம்மாவோட செல்ல மருமகள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார். அவருடைய பெயரே பொய் தான் என்று அவருடைய பெயர் கல்யாணி என்றும் அனைத்தையும் போட்டு உடைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!