தமிழ் சினிமா ரசிகர்கள், இந்த வருடம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பராசக்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகிய முன்னணி நடிகர்களின் முதன்மையான கூட்டணியில் உருவானது.
புதிய கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீலீலா, இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உள்ளார்.

வருகிற ஜனவரி 10ம் தேதி ‘பராசக்தி’ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், பராசக்தி படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீலீலா அதன்போது அஜித் பற்றியும் கூறியிருந்தார்.
அதாவது, “நான் அஜித் குமாரின் வெறித்தனமான ரசிகை. அவர் அற்புதமான மனிதர். எனக்கும் ரேஸிங் போன்ற அதிரடியான விஷயங்களில் ஆர்வம் உண்டு.” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து, அஜித் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!