தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தன்னுடைய சிகிச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா, மீண்டும் 2004இல் சிடாடல் என்ற இணைய தொடரில் முன்னணி கேரக்டரில் நடித்து சினிமாவுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து மா இன்டி பங்காரம் தெலுங்கு திரைப்படத்தில் சமந்தா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் இயக்குநர் நந்தினி இயக்கத்தில் ஆரம்பமானது.
இதற்கு முன்பு ஏற்கனவே ஓ பேபி, ஜபர்தஸ்த் ஆகிய படங்களில் நந்தினியும் சமந்தாவும் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். அதன் பின்பு அவர்களுடைய கூட்டணியில் மூன்றாவது முறையாக மா இன்டி பங்காரம் என்ற படம் உருவாக்கி உள்ளது.

இதற்கு இடையில், சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோடிவை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதில் சமந்தா மகிழ்ச்சியுடன் காணப்பட்ட புகைப்படங்கள் பலராலும் ரசிக்கப்பட்டது.
இந்த நிலையில், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள மா இன்டி பங்காரம் என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் ஒன்பதாம் தேதி ரிலீசாக உள்ளதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான கேரக்டரில் சமந்தா காணப்படுகின்றார்.
Listen News!