தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா காவல்துறையில் புகார் அளித்தார். இதற்கான விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிய கோபத்தில் சமூக வலைத்தளங்களில் பேட்டியும், பதிவுகளும் அவருக்கு எதிராக கொடுத்து வருகின்றார். இதனால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும், சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோக்களை நீக்க கோரியும் ரங்கராஜ் மனு தாக்கல் செய்தார்.
இதன் போது ஜாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து ஜாயை திருமணம் செய்து கொள்வதாக ரங்கராஜ் கூறி ஏமாற்றிவிட்டதாக வாதாடினார். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாயை 8 மணி நேரம் காவல் நிலையத்தில் உட்கார வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்குப் பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கறிஞர், ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் ரங்கராஜ் தான் தந்தை என்று தெரிய வந்தால் அவரை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க மாதம்பட்டி ரங்கராஜ் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தன்னுடைய நற் பெயரை பாதிக்கும் வகையில் மோசமான வீடியோக்களை பரப்பி, யூட்யூப் சேனல்கள் பணமாக்கி வருகின்றன. அப்படி அவதூறு ஆன வீடியோக்களை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என ரங்கராஜ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தீர்ப்பளித்த நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Listen News!