• Jan 08 2026

கம்ருதீன் உண்மையிலேயே பாவம்.. சாண்ட்ரா நடிக்கிறாங்க.! உண்மையை உடைத்த சுபிக்‌ஷா

subiththira / 21 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகின் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 9 தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல தொலைக்காட்சி பிரபலங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு கொண்டவர்கள் போட்டியாளராக பங்கேற்று மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர்.

அதற்கிடையில், சமீபத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சுபிக்‌ஷா தற்போது சமூக வலைத்தளங்களில் தனது பேட்டிகளால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்களை அவர் தன்னுடைய பார்வையில் வெளிப்படுத்தியுள்ளார்.


சுபிக்‌ஷா சமீபத்திய பேட்டியில், "சாண்ட்ரா பிக்பாஸ் வீட்டிற்குள்ள கொடுத்த ரியாக்சன் பார்க்கிறதுக்கு ஓவரா இருந்த மாதிரி இருக்கு. கம்ருதீன் ரெட் கார்ட் வாங்கி வெளிய போறதுக்கு நிக்கும் போது, அவர் சாண்ட்ரா காலில விழுந்து மன்னிப்பு கேட்டார். அவங்க பயந்த மாதிரி பண்ணது எனக்கு ஒரு மாதிரி இருந்திச்சு.”என்றார். 

இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது. அத்துடன் சுபிக்‌ஷாவின் இந்த கருத்து, நிகழ்ச்சியில் நடந்த உண்மையை வெளிப்படுத்துகிறது. 

Advertisement

Advertisement