சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்த முத்து உண்மையை சொல்லுகின்றார்.
அதன்படி ரோகிணியின் பெயர் கல்யாணி என்றும், அவருடைய குழந்தை தான் க்ரிஷ் என்றும் சொல்லுகின்றார். இதெல்லாம் உண்மையா என இது ரோகிணியை விஜயா பார்த்து கேட்க, இதற்குப் பிறகு உண்மையை மறைக்க முடியாது என்று அது என்னுடைய அக்கா கல்யாணியின் குழந்தை, நாங்க டுவின்ஸ் என சொல்லுகின்றார்.
ஆனாலும் முத்து தொலைபேசியில் உள்ள கல்யாணியின் புகைப்படத்தை எல்லாம் காட்டுகின்றார். எனினும் இது எல்லாம் முத்து குடித்துக் கொண்டிருக்கும் போது நினைத்த கற்பனை தான்.
எனவே நான் என்ன சொன்னாலும் ரோகிணி அதற்கு ஏற்றது போல பொய் சொல்லுவார் என்று நினைக்கின்றார். அதற்கு பிறகு மனோஜ், மீனா, ரவி, ஸ்ருதிக்கு கால் பண்ணி வீட்டிற்கு வருமாறு அழைக்கின்றார்.

வீட்டுக்கு வந்த முத்து எல்லோரிடமும் ஒன்று பேச வேண்டும் என்று கதவுகளை எல்லாம் அடைக்கின்றார். இதற்கு இடையில் மீனா டார்ச்சர் கொடுப்பதால் எப்படியாவது மனோஜிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று ரோகிணி மனோஜை அழைத்துக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் அவர் க்ரிஷை தத்து கொடுக்கவும், அதனால் பணம் வரும் எனவும் விஜயாவிடம் கூறிக் கொண்டு இருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!