• Jan 07 2026

மொத்த குடும்பத்தையும் ஏமாற்றிய கல்யாணி.. பொளந்துகட்ட தயாரான முத்து

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் அவர் மீதான எதிர்பார்ப்பு தான் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு காணப்படுகின்றது. 

அந்த வகையில் ஏற்கனவே  க்ரிஷின் உண்மையான அம்மா ரோகிணி தான் என்ற உண்மை மீனாவுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால்  அவர் வீட்டில் உண்மையை சொல்வார் என எதிர்பார்த்த நிலையில் ரோகிணி  எமோஷனலாக  நாடகமாடி அவரை ஆஃப் பண்ணி வைத்திருக்கின்றார். 

இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய ப்ரோமோவில் முத்துவுக்கு இந்த உண்மை தெரிய வருகின்றது. இதைத் தொடர்ந்து  வீட்டிற்கு வந்த முத்து பரப்பரப்பாக அனைவரையும் அழைத்து உண்மையை சொல்ல முனைகிறார்.


அதாவது  முத்துவின் காரில் சவாரி சென்ற ரோகிணியின் முதல் கணவரின் சகோதரரும், அவருடைய மனைவியும் மீண்டும் முத்துவை சந்திக்கின்றார்கள். இதன் போது அவர்கள் தங்களுடைய அண்ணனின் மனைவி புகைப்படத்தை பிரிண்ட் எடுப்பதற்காக வந்ததாக கூறுகின்றார்கள். 

அவர்களுடைய படத்தை பிரிண்ட் எடுப்பதற்கு முத்துவும் அங்கு செல்கின்றார். இதன்போது  ரோகிணி தான் அவருடைய அண்ணனின் மனைவி என தெரிய  வருகிறது. மேலும் க்ரிஷ் அவருடைய மகன் என தெரிய வருகிறது.

இதை தொடர்ந்து வீட்டுக்கு கோபமாக வந்த முத்து, அனைவரையும் அழைத்து உண்மையை சொல்ல முனைகிறார். எனவே இது உண்மையாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.




 




 

Advertisement

Advertisement