முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதன் மூலம் படம் திட்டமிட்டபடி திரைக்கு வருமா என்ற ரசிகர்களின் சந்தேகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக ஜனநாயகன் படத்திற்கு இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும், அதனால் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. சிலர் படத்திற்கு சென்சார் வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால் தற்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவின் ஒப்புதலுடன், ஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் 3 மணி நேரத்திற்கு மேற்பட்ட படங்கள் குறைவாக உருவாகும் நிலையில், ஜனநாயகன் முழுமையான கமர்ஷியல் மற்றும் அரசியல் கதையமைப்புடன் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த நீளம் குறித்தும் கலவையான கருத்துகள் இருந்தாலும், படம் விறுவிறுப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் திரையிடல் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. விஜய்யின் அரசியல் வசனங்கள், நடிப்பு, மாஸான காட்சிகள் ஆகியவை டிரெய்லரின் முக்கிய ஹைலைட்களாக அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!