• Jan 08 2026

அவ்ளோ தான் முடிச்சுவிட்டீங்க போங்க! "ஜனநாயகன்" தணிக்கை சான்றிதழ் தீர்ப்பு ஒத்திவைப்பு

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’ தற்போது சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, கடந்த மாதமே CBFC-க்கு அனுப்பப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மனதில் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காத நிலைமை தற்போது படக்குழுவிற்கு பெரிய சவாலாக உள்ளது.


இந்த பிரச்சினையை முற்றிலும் சமாளிக்க, நேற்று படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. மனு தாக்கல் செய்த நோக்கம், படத்திற்கான தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்துவதும், ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் திட்டத்தை உறுதிசெய்வதும் ஆகும்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து நீதிமன்றம், இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிமன்றம் தற்போது, இந்த வழக்கின் தீர்ப்பை படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 9 காலை தெரிவிப்பதாக ஒத்திவைத்துள்ளது. இதனால் படத்தினை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement