பிக் பாஸ் நிகழ்ச்சியிம் 9வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் கிராண்ட் ஃபைனல். தற்போது பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி டாஸ்க் இடம் பெற்று வருகின்றது. இதில் யாரு பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு கிளம்ப போகின்றார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் சபரி, விக்ரம், திவ்யா, அரோரா, சான்ட்ரா மற்றும் கானா வினோத் ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். கடந்த வாரம் சுபிக்ஷா வெளியேறினார். மேலும் கமருதீன் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெறுவதால், எப்போதும் யாரை வெளியேற்றலாம் என நாமினேஷன் செய்யப்படும், ஆனால் இந்த முறை யாரை காப்பாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதற்கு ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் எனவும் வேண்டுகோளையும் விடுத்தார்.
அதன்படி ஹவுஸ்மேட்ஸ் ஆறு பேரும் சபரியை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இந்த டாஸ்க் முடிந்த பிறகு பணப்பெட்டி டாஸ்க் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்கான செலிப்ரேஷன் கொண்டாட்டமும் நடந்து வருகின்றது.
இதற்கிடையில், பிக் பாஸில் வியானா, திவாகர் மற்றும் பிரவீன் காந்தி ஆகிய போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் தற்போதுள்ள பைனலுக்கு செல்லும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வியானா தற்போது சான்ட்ராவை அட்டேக் பண்ணும் காட்சிகள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன. ஏற்கனவே அவர் விக்ரமின் கேம் ப்ளானை கடுமையாக விமர்சித்தார். அதனால் அவருடைய கண்களில் இருந்து நீர் வழிந்தபடியே, நான் கேம் தப்பாக விளையாடுகின்றேன் என்று சொல்வதால் நான் உங்களுடனே வெளியே வந்து விடுகின்றேன் என்று மனம் உருகி பேசி இருந்தார்.
அதன்படி சான்ட்ராவுடன் வந்த சண்டையின் போதும், சான்ட்ரா யார் என்று எனக்குத் தெரியும். அவருடைய குணம் தெரியும். நாங்கள் வெளியே நல்ல நட்புடன் இருந்தோம். இது சான்ட்ரா நடிப்பு. அவங்க ஒரு பூவ கூட கல்லாக மாற்றுவாங்க. சர்க்கரையை கூட மிளகாயா மாற்றுவாங்க. அவ்வளவு கெத்தா இருப்பாங்க. ஆனா இப்போ பிக் பாஸ் வீட்டில் அடங்கி ஒடுங்கி இருக்காங்க.. அவங்க அப்படி இல்ல என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
மேலும் சான்ட்ரா சக போட்டியாளர்களுடன் பேசும்போது கொடுத்த ரியாக்ஷன்களுக்கும் பதிலடி கொடுத்து வருகின்றார். அதேபோல திவ்யாவிடம் சான்ட்ரா அவரைப் பற்றி கூறியவற்றை வெளியில் வந்து பார்க்குமாறும் தெரிவித்து இருந்தார்.
Listen News!