தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது இந்திய சினிமா முழுவதும் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
பெரிய படங்களில் அதிகமாக நடிக்காதபோதிலும், சமூக ஊடகங்களில் அவர் கொண்டுள்ள ரசிகர் பட்டாளம் மிகவும் பெரியது. அவரது ஒவ்வொரு பதிவும், போட்டோஷூட்டும் இணையத்தில் வைரலாகும் அளவுக்கு அவரது பாப்புலாரிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே, தனது அழகான தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றார். தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் நடித்த அவர், பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ளார்.

பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து படங்கள் இல்லாவிட்டாலும், அவரது தேர்ந்தெடுக்கும் கதைகள் மற்றும் பாத்திரங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்நிலையில், மாளவிகா மோகனன் தற்போது தெலுங்கு சினிமாவில் தனது அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். பிரபல இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகும் ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கில் காலடி எடுத்து வைக்கிறார்.
இந்தப் படத்தில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். பிரபாஸுடன் இணைந்து மாளவிகா நடிப்பது, அவரின் தெலுங்கு மார்க்கெட்டிற்கு மிகப்பெரிய ஓப்பனிங் ஆக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.
உண்மையில், மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் இப்போது தான் நிகழ்கிறது என்றாலும், அது எப்போதோ நடைபெற இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தேவரகொண்டா – மாளவிகா மோகனன் இணைந்து நடிக்க ஒரு தெலுங்கு திரைப்படம் திட்டமிடப்பட்டது.
ஆனால், அந்தத் திட்டம் திடீரென கைவிடப்பட்டது. காரணம், நடிகர் விஜய் தேவரகொண்டா, அந்தப் படத்தை விட ‘லிகர்’ திரைப்படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, மாளவிகா – விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்க இருந்த படம் நிறுத்தப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும், தற்போது மாளவிகா மோகனனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் பெரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Listen News!