தமிழ் சினிமா, சமீப காலமாக 90களின் மற்றும் 2000களின் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து ரீ-ரிலீஸ் செய்வதில் பெரும் ஆர்வத்தை காட்டி வருகின்றது. இப்படியான ரீ-ரிலீஸ் கலாச்சாரம், பழைய திரைப்படங்களுக்கு புதிய ரசிகர் குழுவை உருவாக்கின்றது.
இந்த வரிசையில், சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான ‘தம்பி’ திரைப்படமும் இணைந்துள்ளது. இதன் ரீ-ரிலீஸ் தகவல், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தம்பி’ திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியான போது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாதவன், பூஜா, வடிவேலு, மணிவண்ணன் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
வடிவேலு மற்றும் மணிவண்ணன் படத்திற்கு சிரிப்பூட்டும் காமெடி ரீல்களை வழங்கி, குடும்ப திரைப்படத்தின் தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் படக்குழு வெளியிட்ட தகவலின்படி, வருகிற பிப்ரவரி மாதம் ‘தம்பி’ படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!