• Jan 18 2025

தர்ஷினி கோர்ட்டில் சொன்னது இது தானா? எதிர்நீச்சல் டைரக்டர் கரெக்டா போவாரா? இல்ல காமெடி பண்ணுவாரா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை விரிவாக பார்ப்போம்.

தற்போது நீதிமன்றம் வரைக்கும் வந்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல்  பெண்கள், தங்கள் பக்க நியாயத்தை சரியாக எடுத்துச் சொல்வதற்கு தவறி கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு பக்க பலமாக சாருலதா கோர்ட்டில் ஆஜராகி இருக்கிறார்.

அதில் ஜனனி தங்கள் எல்லாரையும் ஜெயில் அடைத்து  விட வேண்டும் என்று குணசேகரன் ப்ளான் பண்ணியுள்ளார் என்று சொல்கிறார்.

இவ்வாறான நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் கோர்ட்டில் தர்ஷினியின் வீடியோ ஒன்று ஒளிபரப்பாகிறது.

ஆனால், தர்ஷினி சொன்ன விஷயத்தை கேட்டு  நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். நீங்களும் உங்களுடைய மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.


மறுபக்கத்தில், குணசேகரனின் முகத்தை பார்க்கும்போது அவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனால் தர்ஷினி சொன்ன வார்த்தைகளால் குணசேகரனுக்கும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது போல.

மேலும், குணசேகரன் தனக்கு திருமணம் செய்ய பிளான் போட்ட விஷயத்தையும் தர்ஷினி உடைத்து இருப்பாரோ என்றும் யோசிக்க வைக்கிறது.

அதேவேளை, ஜீவானந்தம் ஊரும் தர்ஷினி அடைந்து வைத்திருந்தது போன்ற ஒரு காட்டுப்பகுதி தான். அதனால் ஜீவானந்தத்திற்கு தெரிந்தவர்களிடம் தர்ஷினி கிடைத்திருக்கிறாரா என்றும் யோசிக்க வைக்கிறது. 

அத்துடன், தப்பித்த தர்ஷினியை குணசேகரன் கண்டுபிடித்து அடைத்துவிட்டு, அவரை மிரட்டி தன்னை கடத்தியது தன்னுடைய அம்மா மற்றும் சித்திமார் தான் என்று சொல்ல வைத்திருக்கிறாரோ என்றும் குழப்பங்கள் எழுந்துள்ளது.

ஆனால் அவ்வாறு நடந்தால் இதுவரைக்கும் எதிர்நீச்சல் பெற்று இருந்த பெயரை மொத்தமாக ரசிகர் மத்தியில் கெடுத்து விடும்.

அதாவது, இந்த சீரியலும் டிஆர்பிக்காக தான் பெண்களை வைத்து உருட்டுகிறது என்பது நிரூபணம் ஆகிவிடும். எனவே என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement