• Jan 18 2025

மொய்தீன் பாய் மகனாக நடித்த விக்ராந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளராக இயற்றிய திரைப்படம் தான் லால் சலாம்.

இதில் அவருடைய தந்தையான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதோடு மற்றும் பல முன்னணி நடிகர்கள், துணை நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அதன்படி, இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள்  முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் கடந்த  9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.


லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும், லால் சலாம் படம் மிகச் சிறப்பாக விமர்சனங்களை பெற்றுள்ளதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருவதாக  லைகா நிறுவனம் தனது மகிழ்ச்சியை அண்மையில் பகிர்ந்துள்ளது.


இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விக்ராந்த் ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இதேவேளை, பிரமாண்டமாக வெளியான லால் சலாம் படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement