விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதன் முதலாம் பாகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக இதன் இரண்டாவது பாகமும் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை ஹேமா. இதன் முதல் பாகத்தில் கொஞ்சம் டெர்ராக இருந்தவர், இரண்டாம் பாகத்தில் ரொம்பவும் சாப்டான நபராகவும் கூட்டுக் குடும்பத்தை நேசிக்கும் பெண்ணாகவும் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், நடிகை ஹேமா தற்போது கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். ஆவணக் கொலையை மையமாக வைத்து உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இந்த கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகன் நடிக்க உள்ளார்.

சாதி மறுப்பு திருமணங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காதலுக்கும், நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நெல்லை சீமை என்பதையும் இந்த படம் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாம்.
சின்னத்திரையில் ஹேமாவை பார்த்த ரசிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் பார்ப்பதற்கும் ஆவலாக உள்ளனர். எனவே ஹேமாவின் திரை வாழ்க்கை மேலும் சிறப்பாக அமைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!