வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல, ராஜபாட்டை,ஆதலால் காதல் செய்வீர,பாண்டிய நாடு, பாயும் புலி ,நெஞ்சில் துணிவிருந்தால்,ஜீனியஸ், ஈஸ்வரன் போன்ற வெற்றி படங்களின் இயக்குநர் தற்பொழுது 2k love story எனும் படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
காதலர் தின வெளியீடாக அமைந்த இப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறித்த படத்தின் நிகழ்வு ஒன்றின் போது இயக்குநரிடம் ஆதலால் காதல் செய்வீர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் அருமையா பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் "நிறைய பேர் 'ஆதலால் காதல் செய்வீர் படத்தைப் பார்த்துவிட்டு அந்தக் குழந்தை அழுகிற கிளைமாக்ஸ் சீன் அற்புதமான ஐடியானு பாராட்டினார்கள். ஆனால் அவ்ளோ பெரிய சைக்கோ எல்லாம் நான் கிடையாது. ஒரு குழந்தையை வெயிலில் அழ வைக்க வேண்டும் என்று ஒரு மனுஷன் முதலில் யோசிக்கவே கூடாது. அந்த மாதிரி நான் யோசிக்கவே இல்லை. ஒரு குழந்தை காலை எழுந்ததில் இருந்து ஒரு அனாதை ஆசிரமத்தில் என்னென்ன பார்க்கும் என்பதை தான் நான் ஷூட் பண்ண நினைத்தேன். அப்படி அந்தக் குழந்தை விளையாடிட்டு இருக்கும்போது திடீர்னு காலை பிடித்துக் கொண்டு அழுதுச்சு. அப்போ உடனே அசிஸ்டன்ட் டைரக்டர் அந்த குழந்தையை தூக்கிட்டான். அது வெறும் 3,4 நொடிகள் தான். என்னடா குழந்தை அழுகுதுனு நினைத்தோமே தவிர கால் சுட்டு தான் குழந்தை அழுதது என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என பேசியுள்ளார்.
Listen News!