நீண்டகால இடைவெளியின் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியாகிய கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் நாளிலே எழுந்த ஒரு சில விமர்சனங்களினால் படம் தோல்வியினை சந்தித்தது. அதன் பின்னர் மிகவும் மோசமான நிலையில் இருந்த சூர்யா அதிலிருந்து மீண்டுள்ளார்.
சமீபத்தில் கூட அவரது அகரம் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தினை திறந்து வைத்துள்ள இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ரெட்ரோ" படத்தில் நடித்து வருகின்றார். மற்றும் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடித்து வருகின்றார். வருகின்ற மே மாதம் முதலாம் திகதி "ரெட்ரோ" திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதைவிட இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "இரும்புக்கை மாயாவி ","rolex " ஆகிய படங்களில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதிரடியாக இயக்குநர் அடுத்த மாதம் "rolex " படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பல படங்களில் நடிப்பதற்கு ஒத்து கொண்டுள்ள இவர் கங்குவா படத்தின் நஷ்டத்தினை ஈடு செய்வதற்காக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக வாக்கு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.
Listen News!