• Jul 12 2025

வெற்றியடையாமல் விடமாட்டேன்..! அடுத்த வேட்டைக்குத் தயாராகும் அஜித்குமார்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘தல’ என ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் அஜித் குமார், தனது சினிமா வாழ்க்கையைத் தாண்டி மோட்டார் ரேஸிலும் தனது தனித்துவத்தை நிலைநாட்டி வருகின்றார். தற்போது அவர் மீண்டும் ஒரு  ரேஸில் களமிறங்க தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அஜித் குமார் தற்போது பிரான்ஸின் புகழ்பெற்ற பால் ரிச்சர்ட்டில் நடைபெறவுள்ள GT3 கார் ரேஸுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். அவரின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு சர்வதேச ரேஸிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ள அஜித், தற்போது GT3 வகை ரேஸிங் போட்டிக்கு தயாராகவுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ரேஸில் பங்கேற்கும் முன்னோட்ட பயிற்சிகள் தற்போது பால் ரிச்சர்ட் ரேஸ் டிராக்கில் நடந்து வருகின்றது. அஜித் அங்கு ரேஸிங் உடையில், தனது வாகனத்துடன் தயாராகியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement