• Jan 18 2025

14 வருடங்களுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில்! 'குட் பேட் அக்லி' படத்தில் இணையும் 'பில்லா' நடிகர்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘பில்லா’ படத்தில் நடித்த முக்கிய நடிகர் 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அவர் அஜித் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்ததாக, அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக, இந்த படத்தில் நடிகர் பிரபு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. 


அஜித் நடித்த ’பில்லா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்த பிரபு, அதன் பின்னர் ’அசல்’ என்ற படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் அஜித் படத்தில் பிரபு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் யாரெல்லாம் இந்த படத்தில் இணைகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement