• Jan 19 2025

உப்பு கருவாடு ஊற வச்ச சோறு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஷாலினி! எல்லாம் பிக் பாஸ் எனர்ஜியா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் பங்கு பற்றியவர் தான் ஷாலினி சோயா. இவர் மலையாள நடிகையாக காணப்பட்ட போதும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்த ஒருவராக காணப்படுகின்றார்.

ராஜா மந்திரி என்ற படத்தில் மூலம் தமிழில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்பு கண்ணகி படத்திலும் நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஷாலினி சோயாவுக்கு ரசிகர்கள் ஏராளமாக குவிந்தனர். அதற்கு காரணம் அவருடைய கள்ளம் கபடம் இல்லாத மழலை பேச்சும், மலையாளமும் தமிழும் கலந்த மொழி நடையும் குழந்தை தனமான வேலைகளும் தான்.


ஆனாலும் ஆரம்பத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  நடுவராக காணப்பட்ட தாமுவை மரியாதை இன்றி பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி. ஆனாலும் நாளடைவில் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். தற்போது அவருக்கென்றே மிகப்பெரிய பேன்ஸ் பேஜ் காணப்படுகிறது. மேலும் பிக் பாஸ் சீசன் எட்டில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஷாலினி ஜோயா ஆடிய நடனம் ஒன்று இணையதளத்தில் வைரலாக உள்ளது. அதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள சந்தோஷத்தில் குத்தாட்டம் போடுகின்றாரா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். இதோ குறித்த வீடியோ

Advertisement

Advertisement