• Jan 18 2025

கலைஞர் டிவியில் ஒரு சொல்வதெல்லாம் உண்மை.. கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் குயிலி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும்  நடித்து அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகை குயிலி கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்தவர் நடிகை குயிலி. பாலச்சந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் உருவான 'பூவிலங்கு' என்ற திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமான அவர் அதன் பின்னர் 'கல்யாண அகதிகள்' 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' 'டிசம்பர் பூக்கள்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

அதன் பின்னர் குணச்சித்திர நடிகை ஆகவும் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறிய நிலையில் 'நாயகன்' படத்தில் ஜனகராஜ் உடன் ஒரு பாடலில் ஆட்டம் போட்டு இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்த நிலையில் தான் அவர் திடீரென தொலைக்காட்சியில் நடிக்க முடிவு செய்தார். 'காசளவு நேசம்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த அவருக்கு பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கிடைத்தது. குறிப்பாக 'அண்ணி' 'அண்ணாமலை' 'கோலங்கள்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் அடித்தார். சரவணன் மீனாட்சி தொடரில் இயக்குனர் ராஜசேகருக்கு ஜோடியாக அவர் நடித்தது தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில்  கூட நடிக்காமல் இருந்த அவருக்கு தற்போது கலைஞர் டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது

இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய 'சொல்வதெல்லாம் உண்மை' போலவே கலைஞர் தொலைக்காட்சியில் 'வாழ்ந்து காட்டுவோம்' என்ற நிகழ்ச்சி தொடங்க இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் சில ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடிகை குயிலி சின்னத்திரைக்கு வர இருப்பதை பார்த்து அவருடைய நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

சமூகப் பிரச்சினைகள் மற்றும் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு அளிக்க இருப்பதாகவும் தெரிகிறது.   

Advertisement

Advertisement