• Jan 19 2025

32 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் இப்ப தான்.. நெகிழ்ச்சியான அனுபவத்தை கூறிய குஷ்பு..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பு 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும் அதுவும் பிரபல நடிகர் நானா படேகர் உடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைப்படத்தில் தான் அறிமுகமானார். 1980 ஆம் ஆண்டு முதல் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த நிலையில் ரஜினிகாந்த், பிரபு நடித்த ’தர்மத்தின் தலைவன்’ என்ற படத்தில் 1988 ஆம் ஆண்டு தமிழில் நாயகி ஆக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடித்த குஷ்பு, தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி படங்களிலும் நடித்தார். கடந்த 1992 ஆம் ஆண்டு ’பிரேம் பதான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் ஹிந்தியில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் 32 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அது மட்டும் இன்றி நானா படேகர் உடன் நடிக்க இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

’ஜர்னி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அனில் சர்மா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் தேர்தல் நெருங்குவதால் பிரச்சார பணி இருக்கும் நிலையில் அதற்கு முன்பே இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று குஷ்பு திட்டமிட்டுள்ளார்.

32 ஆண்டுகளுக்கு அடுத்து மீண்டும் பாலிவுட் படத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இப்போது முற்றிலும் புத்துணர்ச்சி கொண்டவராக உணர்கிறேன் என்றும் நானா படேகருடன் நடிப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு சிறப்பு தோற்றத்தில் நடித்த ’அரண்மனை 4’  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement