• Jan 18 2025

விஜய் அரசியல் வருகை! சமுத்திரகனி சொன்ன அந்த வார்த்தை.. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்களை எங்கு பார்த்தாலும் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


சிலர் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், பலர் நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்று தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.


வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும் அந்தப் படத்தை மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தென்காசி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று நடிகர் சமுத்திரகனியை சந்தித்த செய்தியாளர்கள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் நல்ல மனிதர்கள் அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.


நடிகர் விஜய் உங்களை அரசியலுக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு, அவர் என்னை கூப்பிடலன்னா கூட நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன் என வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

Advertisement

Advertisement