• Jan 19 2025

புதிய சீரியலை களமிறங்கிய ஜீ தமிழ் தொலைக்காட்சி.. பூஜையுடன் ஆரம்பமான ஷூட்டிங்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஜீ தமிழ் சேனல் பிரபலமாக திகழ்ந்து வருகின்றது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டி போட்டு சீரியல் புதிதாக களம் இறக்கி வரும் நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியும் புதிய புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றது.

தற்போது இந்த சேனலில் நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற சீரியல் வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க உள்ளார். இந்த சீரியல் தொடர்பில் இதுவரை இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.


குறித்த சீரியலில் 35 வயதான நாயகிக்கு 45 வயதான நாயகன் என இருவரும் குடும்பத்திற்காக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவரும் நிலையில், திடீரென இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணையும் சூழல் உருவாகிறது. இப்படியான இவர்களின் வாழ்க்கையில் இனி நடக்கப்போவது என்ன என்பதுதான் இந்த சீரியலின் கதைக்களமாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் ஷூட்டிங் பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement