• Jan 19 2025

மலைக்கோவிலில் அரங்கேறும் ஆனந்தியின் கல்யாணம்.. நந்தா திட்டத்தை முறையடிப்பாரா அன்பு?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் இந்த வாரம் மிகப்பெரிய திருப்பங்கள் நிறைந்துள்ளது. அதில் மலை கோவிலில் என்னை கல்யாணம் பண்ணா விட்டால் நான் உயிரிழப்பேன் என நந்தா எழுதிய கடிதத்தால் ஆனந்தி உடைந்து போய் உள்ளார்.

இதனால் ஆனந்தி என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நேற்றைய எபிசோட் இல் நந்தா வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு மலைக்கோவிலுக்கு செல்கிறார் ஆனந்தி.

மறுபக்கம் மகேஷ் தனது அம்மா அப்பாவிடம் ஆனந்தியை அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு சம்பந்தம் வாங்க காத்துக் கொண்டுள்ளார். ஆனந்தியை கூட்டி வருகிறேன் என்று சொன்ன மித்ரா, வெறும் கையோடு வர மகேஷ் ஆனந்தி எங்கே என கேட்டு  ஏமாற்றத்துடன் நிற்கின்றார்.


அதற்கு ஆனந்தி வேறு ஒருவரை காதலிக்கிறார். அந்த பையனை திருமணம் செய்ய கிளம்பி போயியுள்ளார் என்று பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறார். அதே நேரத்தில் கம்பனியில் நந்தாவின் உண்மையான அட்ரெஸ் ஐ கண்டுபிடித்து அன்புவிடம்  கொடுக்கின்றார்கள்.

அன்பு அந்த அட்ரஸுக்கு போய் பார்த்தபோது நந்தாவின் வீடு பூட்டப்பட்டுள்ளது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஒரு சுவரில் நந்தா இதுவரை தான் ஏமாற்றிய பெண்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்துள்ளார்.

அதில் ஆனந்தியின் புகைப்படமும் உள்ளது. இப்படி நேற்றைய எபிசோடு முடிந்திருக்கும் நிலையில், இன்றைய ப்ரோமோவில் ஆனந்தியும் நந்தாகும் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருக்க அன்பு அந்த மலைக்கோவிலுக்கு செல்கிறார். நந்தா ஆனந்தி கழுத்தில் தாலி கட்டும் வேளையில் அன்பு அந்த திருமணத்தை நிறுத்துவது போல் காட்டப்படுகிறது.

Advertisement

Advertisement