• Jan 19 2025

உண்மையை உடைத்த ரோகிணி.. திடீரென என்ட்ரி கொடுத்த மலேசியா மாமா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின்  இன்றைய எபிசோட்டில், விஜயா வீட்டில் இருந்து எல்லோரும் ஒவ்வொருவராக வெளியேற முத்து மட்டும் வெளியே போகாமல் இருக்கின்றார். இதனால் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு சொல்ல, அவர் இன்னோரு நண்பி மூலம் முத்துக்கு ஃபோன் பண்ணி சவாரி வருமாறு சொல்லுகிறார். இதனால் முத்துவும்  வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார்.

இதைத்தொடர்ந்து ரோகினி தனது அம்மாவிடம் நீ எதுக்கு இங்க வந்த? தினமும் நான் பயந்து கொண்டு இருக்கின்றேன் என்று கண்டபடி பேச, ரோகினி அம்மா நீ உன்ன பத்தி மட்டும்தான் யோசிக்கிறா, நீ பெத்த பிள்ளை தானே க்ரிஷ். நான் இல்லாட்டி அந்த பிள்ளையை நீ அனாதை ஆசிரமத்தில சேர்த்துவிடுவாய  என்று பயமா இருக்கு என்று சொல்ல, நான் அவனை பத்து மாசம் சுமந்து பெத்த தாய். நான் அவனோட அம்மா என்று சொல்ல, கிரிஷ் இதனை கேட்டு விடுகிறார்.


இதை அடுத்து கிரிஷ் அத்தை நீதான் என் அம்மாவா? என்று கேட்டு கொண்டு வர, ரோகினி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார். ஆனாலும் க்ரிஷ் விழபோன போது நான்தான் உன் அம்மா ரோகிணி என்று சொல்லி கிரிஷை கட்டிப்பிடித்து அழுகிறார்.

மறுபக்கம் வித்யா வீட்டுக்கு சென்ற மீனா, அவருக்கு பூ மாலை கட்டுவதற்கு சொல்லிக் கொடுக்கின்றார். இதன் போது வித்யா உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் உங்க மாமியா தான் ரொம்ப டார்ச்சர் போல என்று சொல்ல, என் மாமியார் பற்றி அப்படி சொல்லாதீங்க என்று சொல்லுகிறார். இதை தொடர்ந்து ரோகிணி பற்றி மீனா கேட்டுக் கொண்டிருக்க, வித்யா ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டிருக்கிறார். மேலும் மீனா உங்களுடைய புகைப்படங்களை காட்டுமாறு கேட்க, வித்யா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த நேரத்தில் மலேசிய மாமா அங்கு வந்து கதவை தட்டுகின்றார்.

இது தான் சான்ஸ் என ஓடிப் போய் கதவு திறந்த பார்த்த வித்யாவுக்கு அதிர்ச்சி. அதாவது மலேசியா மாமா நிற்க நீ ஏன் இங்க வந்தா? என்று கேட்கிறார் வித்யா. அதற்கு நான் உனக்கு வழமையாக கறி கொண்டு வருவேன் தானே என்று சொல்ல, உள்ளே இருந்த மீனா இது மலேசியா மாமாவின் குரல் ஆச்சே என யோசிக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement