• Sep 09 2026

நீ சரிப்பட்டு வரமாட்ட..- சிரிக்க வைத்த வசனத்துக்கு பின்னால் இப்படியொரு பின்னணியா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

வாத்தியார் படத்தில் இடம்பெற்ற “அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட..”என்ற காமெடி வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அந்த வசனம் உருவான பின்னணி குறித்து இயக்குநர் வெங்கடேஷ் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில், படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், ஊரில் மழை பெய்யாததால், ஒரு பிரம்மச்சாரி இளைஞர் துணி இல்லாமல் ஊரைச் சுற்றி வந்தால் மழை வரும் என்ற ஐதீகத்தை மையமாக வைத்து காமெடி காட்சி அமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


அந்தக் காட்சியில், “ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்க, அதனால அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...” என்ற வசனம் முதலில் இடம்பெற்றிருந்ததாம். ஆனால், அந்த வசனத்தின் கடைசி வரி தேவையில்லை என்றும், “அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...” என்று சொல்லும் அளவுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் இயக்குநர் வெங்கடேஷ் தானே கூறி மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

ஒரு சாதாரண காமெடி வசனத்தின் பின்னணியில் இவ்வளவு சுவாரஸ்யமான சம்பவம் இருந்ததா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தற்போது இயக்குநர் வெங்கடேஷின் இந்த பேட்டி மற்றும் அந்த காமெடி வசனத்தின் பின்னணி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement