நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது வாழ்க்கையில் சந்தித்த இக்கட்டான காலகட்டம் மற்றும் கார் மீதான தனது காதல் குறித்து பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
காதல் முறிவு மற்றும் சில திரைப்பட வாய்ப்புகளை இழந்த காலகட்டத்தில், தான் எதிர்கொண்ட சூழ்நிலைகள் மிகவும் சவாலானதாக இருந்ததாக ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் நடிகை சுஷ்மிதா சென் தனக்கு வைர மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கிய சம்பவம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனக்கு சிறு வயது முதலே கார்கள் மீது அதிக ஆர்வம் இருந்ததாக கூறிய ஐஸ்வர்யா லட்சுமி, தனது உழைப்பின் மூலம் தனக்கு பிடித்த காரை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி தான் அந்த காரை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தான் அந்த காரை எவ்வாறு வாங்கினார் என்பது தொடர்பாக இணையத்தில் வெளியான விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என்றும், அந்த கார் தனது தனிப்பட்ட உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றி என்றும் ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Listen News!