• Oct 23 2026

மக்கள் எப்போதும் என்னை தேடமாட்டார்கள்… SK-விடம் சீமான் சொன்ன வார்த்தை.. பின்னணி என்ன?

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சீமான் – சிவகார்த்திகேயன் இடையே நடந்ததாக வெளியாகியுள்ள உரையாடல் ஒன்று தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயன், சீமானிடம் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

அரசியல் சார்ந்த டென்ஷன்களில் இருந்து சற்று விலகி, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்துமாறு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், “நீங்கள் சினிமாவுக்கு வந்தால் மக்கள் உங்களை தேடி வருவார்கள்” என்ற வகையில் அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், “மக்கள் தேடட்டும்” என்று சிவகார்த்திகேயன் கூறியதாகவும், அதற்கு சீமான் , “மக்கள் எப்போதும் என்னை தேடமாட்டார்கள்” என பதிலளித்ததாகவும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதில், சீமானின் தற்போதைய மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியலில் தொடர்ந்து பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வரும் சீமான், சினிமாவிலும் நீண்ட காலமாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடந்ததாக கூறப்படும் இந்த உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, “மக்கள் எப்போதும் என்னை தேடமாட்டார்கள்” என சீமான் கூறியதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த உரையாடல் தொடர்பான முழுமையான பின்னணி மற்றும் சூழல் குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement