• Oct 23 2026

இவங்க என்ன இப்புடி சொல்லிட்டாங்க.! விஜய்யிடம் அப்படி என்ன இருக்கு.. நடிகை சினேகா ஓபன்டாக்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு, நடனம், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், நடிகை சினேகா விஜய் குறித்து பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் குறித்து சினேகா பேசும்போது, “விஜய் எப்பவுமே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அவருடைய நடிப்பு, டான்ஸ் என எதை எடுத்துக்கொண்டாலும் அவ்வளவு வசீகரமாக இருக்கும். அவருடைய பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொரு முறையும் ரசிக்க முடியும்.

ஆனால், அவர் எப்படி குழந்தைகளை மட்டும் இவ்வளவு எளிதாக கவர்கிறார் என்பது தான் எனக்கு இன்னும் புரியவில்லை. என் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குக் கூட விஜய்யை அவ்வளவு பிடிக்கும். அவர் குழந்தைகளை கவர்வதற்காக என்ன செய்கிறார் என்பதே எனக்கு தெரியவில்லை. அவரிடம் ஏதோ ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

விஜய்யின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் அவரது நடிப்பு மற்றும் நடனத்திறமையை தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில், சினேகாவின் இந்தப் பேச்சும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மத்தியிலும் விஜய்க்கு இருக்கும் வரவேற்பை சினேகா குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


Advertisement

Advertisement