• Sep 09 2026

‘மகாநதி’ சுவாமிநாதனா? புது சீரியலில் மாஸ் கெட்டப்பில் என்ட்ரி.. வெளியானது சூப்பரான அப்டேட்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல் தான் ‘மகாநதி’. குடும்பப் பின்னணியில் உருவான இந்தத் தொடர், அதன் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, இதில் நாயகியாக நடித்த லட்சுமி ப்ரியா தனது நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.


‘மகாநதி’ தொடரில் நடித்த பிறகு லட்சுமி ப்ரியாவுக்கு தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது தனிப்பட்ட மற்றும் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘மகாநதி’ சீரியலில் நாயகனாக நடித்த சுவாமிநாதன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சுவாமிநாதனின் புதிய கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. மேலும், அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement