• Jun 04 2026

பல்லு வச்சவங்க முதல் பல்லு போனவங்க வரை சிரிக்கலாம்.! தியேட்டரை கலக்கிய பரிமளா & கோ எப்படி?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சஞ்சனா, அனந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பரிமளா & கோ' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம் - ஊர்வசி ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. 

இந்த நிலையில், இந்த படம் குடும்பக் கதை, நகைச்சுவை, மர்மம் மற்றும் திரில்லர் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதன்படி இந்த படம் பற்றி பொது மக்கள் தெரிவித்த விமர்சனங்களை பார்ப்போம்.

அதன்படி, 20 வருஷம் கழிச்சு நம்ம ஜெயராம் சாரும் ஊர்வசி மேமும் வந்து சேர்ந்து நடிக்கக்கூடிய ஒரு படமா இந்த பரிமளா & கோ வந்திருக்கு. முதல் முறையாக பாண்டிராஜ் சார் டார்க் ஹியூமர் ட்ரை பண்ணிருக்காங்க. காமெடி காமெடி காமெடின்னு காமெடிக்கு பஞ்சமே இல்லாம இந்த படத்தை சூப்பரா எடுத்துருக்காங்க.

ட்ரைலர் பார்க்கும்போது ஒரு குடும்ப படம் மாதிரி இருந்துச்சு. ஆனா தியேட்டர்ல போய் உட்கார்ந்தா இது ஒரு டார்க் ஹியூமர் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்னு தெரியுது. ஒரு பக்கம் கொலை வழக்கு, இன்னொரு பக்கம் குடும்ப காமெடி. ரெண்டையும் கலக்கி செமையாக கொடுத்திருக்காங்க.


படத்தோட பெரிய பிளஸ் என்னன்னா காமெடி தான். ஊர்வசி மேம்லாம் நடிப்பு ராட்சசி. கேஷுவலா காமெடி பண்றாங்க. அவங்களோட எக்ஸ்பிரஷன்லேயே சிரிப்பு வந்துடும்.

ஜெயராம் சார் இந்த படத்துல எப்படி பார்த்தாலும் நூறு தடவையாவது பல்ல கடிச்சிருப்பாரு. அதுவே ஒரு தனி காமெடி.

அனந்திதா, சஞ்சனா, யோகி பாபு எல்லாரும் சேர்ந்து அடிக்கிற காமெடி தியேட்டர்ல கை தட்டி சிரிக்க வைக்குது.

மிஷ்கின் சார் ஒரு போலீஸ் அதிகாரியா வர்றாரு. அவரோட இன்வெஸ்டிகேஷன் டிராக் சூப்பர். சாண்டி மாஸ்டரும் வித்தியாசமான ரோல்ல வந்திருக்காரு. ரவுடி, ரொமான்ஸ், காமெடி எல்லாத்தையும் கலக்கி பண்ணிருக்காரு.


செகண்ட் ஹாப்ல வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்க முடியாத மாதிரி இருந்துச்சு. பாண்டிராஜ் சார் இப்படி ஒரு திருப்பம் வைப்பாருன்னு நினைக்கவே இல்ல.

முக்கால்வாசி படம் ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்குது. ஆனா போரடிக்காம காமெடி, திரில், ட்விஸ்ட் எல்லாத்தையும் கொடுத்து நம்மள சீட்டுல கட்டி வச்சிருக்காங்க.

பாண்டிராஜ் சார் தன்னோட கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வந்து இதையும் என்னால பண்ண முடியும் என்று நிரூபிச்சிருக்காரு.

ஆக மொத்தத்தில், பல குடும்பங்கள், குழந்தைகள், பெரியவர்கள், சின்னவர்கள், பல்லு போனவர்கள், பல்லு வச்சவர்கள் எல்லாரும் தியேட்டருக்கு போய் ஜாலியா சிரிச்சிட்டு வரலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சு பார்த்த படம் இது.

கடைசில டிரக்ஸ் ஒழிக்கணும்னு நல்ல ஒரு சமூக கருத்தையும் சொல்லியிருக்காங்க. அதனால தாராளமா தியேட்டருக்கு போய் பரிமளா & கோ படத்தை பார்த்து என்ஜாய் பண்ணிட்டு வரலாம்.. என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement