தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு தனி அடையாளத்தை உருவாக்கிய முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தேவா. இவரது இசையில் உருவான ஏராளமான கானா பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் தேவா பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய தேவா, தான் சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் இசைத்துறையில் நிலவிய போட்டி குறித்தும், கானா இசையை திரைப்படங்களில் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்தும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.
“நான் ஏன் கானாவை கொண்டு வந்தேன் என்பதற்கு ஒரு கதை உண்டு. நான் வந்த காலத்தில் ஒரு புறம் ராஜா சார், இந்த பக்கம் ரகுமான் தம்பி. எந்த பாட்டு போட்டாலும் ஒன்று ராஜா சார் மாதிரி இருக்கும், அல்லது ரகுமான் மாதிரி இருக்கும். இதை பத்திரிகைகளில் கழுவி ஊற்றுவார்கள்.
அப்போது தான் நமக்கு என ஒரு முத்திரை வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக கானா பாடலை திரைப்படத்தில் கொண்டு வந்தேன்” என தேவா தெரிவித்துள்ளார்.
தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கானா பாடல்களைத் திரைப்படங்களில் பயன்படுத்தியதாக தேவா கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!