• Sep 25 2026

எதிர்பார்த்தது வேற.. நந்தது வேற.! 'தி பாரடைஸ்’ படத்திற்கு முதல் நாளிலே இவ்வளவு தான் வசூலா

shali / 36 minutes ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரே ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 24) தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து இன்று தமிழ் மொழியிலும் இப்படம் வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க மாஸ் அவதாரத்தில் நானி நடித்துள்ளதால், அவரது வழக்கமான படங்களுடன் ஒப்பிடும்போது இப்படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திரைப்படம் வெளியான பின்னர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, நானியின் மாஸ் கதாபாத்திரம் அவருக்கு முழுமையாக பொருந்தவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நானியின் நடிப்பு குறித்து பாராட்டுகளும் வெளியாகி வருகின்றன.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் உலகளவில் சுமார் ரூ.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நானியின் படங்களில் குறிப்பிடத்தக்க தொடக்கத்தை இப்படம் பதிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement

Advertisement