• Sep 30 2026

ராகுல் வீட்டில் திடீர் IT ரெய்டு.. 12 இடங்களில் சோதனை! பின்னணியில் இப்படி ஒரு விஷயமா?

shali / 48 minutes ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராகுல் ப்ரீத் சிங் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனைக்கான காரணம் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘என்.ஜி.கே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராகுல் ப்ரீத் சிங், தற்போது இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார். அடுத்ததாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி மும்பையில் ராகுல் ப்ரீத் சிங் வசிக்கும் வீடு உள்ளிட்ட இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. திரைப்பட முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்ததாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2021-22 காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் விவகாரத்தில் ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. கடந்த ஆண்டு அவரது சகோதரர் அமன் மீதும் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தது.

இதனால், தற்போதைய சோதனைக்கும் இந்த விவகாரங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement