• Sep 30 2026

முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. சிக்மா குறித்து வெளியான சுவாரஸ்யமான தகவல்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷன் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

‘சிக்மா’ படத்தை முதல் படமாக இயக்கியிருந்தாலும், ஜேசன் சஞ்சய் ஒரு அறிமுக இயக்குநர் என்ற உணர்வே ஏற்படாத அளவுக்கு மிகவும் சிறப்பாகவும், ஒரிஜினலாகவும் படத்தை உருவாக்கியுள்ளதாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். மேலும், படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் பெருமைப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘சிக்மா’ படத்தை முதலமைச்சர் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. அப்படி நினைக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். படத்தில் ஆக்ஷன் மட்டுமின்றி அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ள நிலையில், ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement