• Sep 28 2026

20வது திருமண நாள் கொண்டாட்டத்தில் நடந்த அந்த ஒரு விஷயம்..! நெகிழ்ச்சியில் சூர்யா

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தங்களது 20-வது திருமண ஆண்டு நிறைவை முன்னிட்டு பகிர்ந்துகொண்ட அழகான தருணங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா – ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து 20 ஆண்டுகளாக தங்களது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக பயணித்து வரும் இந்த ஜோடிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், 20-வது திருமண ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி. உண்மையில், 20-வது திருமண ஆண்டு நிறைவையொட்டி இதுபோன்ற ஒன்றை செய்ய வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது.

இதுபோன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. இதில் எங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். மிகவும் அழகான தருணமாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களது திருமண வாழ்க்கைக்கு ரசிகர்கள் பல ஆண்டுகளாக வழங்கி வரும் அன்பையும் மரியாதையையும் குறிப்பிட்ட சூர்யா, இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement