மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பஹத் பாசில், தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ள கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
நடிகர் பஹத் பாசில் குழந்தை நட்சத்திரமாக அல்லாமல், இளம் வயதிலேயே ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரது முதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சினிமா மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது 17, 18 வயதிலேயே சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்கா சென்ற பஹத் பாசில், அங்கு பொறியியல் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களை படித்துள்ளார். அதே காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் உலக சினிமா குறித்த தனது பார்வை விரிவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தனது தந்தைக்காக ஒரு திரைப்படத்தில் நடிக்க மட்டும் மீண்டும் சினிமாவுக்கு வந்ததாக பஹத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த ஒரு படம் என்ர பயணத்தில் தற்போது 66 திரைப்படங்களாக மாறியுள்ளது. தனது சினிமா பயணம் 24-வது ஆண்டில் தொடர்வதாகவும், இடையில் சுமார் 6 முதல் 7 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பஹத் பாசிலின் இந்த சுவாரஸ்யமான சினிமா பயணக் கதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!