• Oct 01 2026

6 நாளில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா..? ‘மீசைய முறுக்கு 2’ வசூலில் எதிர்பாராத திருப்பம்.!

shali / 43 minutes ago

Advertisement

Listen News!

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், இப்படத்தின் 6வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள இப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் ஆதியுடன் இணைந்து ரம்யா ரங்கநாதன், சைத்ரா அச்சர் மற்றும் கெத்திகா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், நாசர், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம், இளைஞர்கள் மற்றும் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் மற்றும் ஆதியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, படத்தின் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து சமீபத்தில் கொண்டாடினர். இந்த நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 6ம் நாள் உலகளாவிய வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement