நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
‘டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன், தொடர்ந்து ‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதன்பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ரம்யா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
இதையடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதற்கிடையில் திருமணம் செய்துகொண்ட ரம்யா, திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ரம்யா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் நடத்திய கிளாமர் போட்டோஷூட்டின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் வித்தியாசமான லுக்கில் தோன்றியுள்ள ரம்யா பாண்டியனை பார்த்த ரசிகர்கள், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!