கிராமத்து மக்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள் மற்றும் சாமி வழிபாடு சார்ந்த உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் நூறு சாமி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, நடிகை சுவாசிகா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.
சாதாரண மக்களின் வாழ்க்கையில் காணப்படுகின்ற மரபு, நம்பிக்கை மற்றும் மதத்தின் தாக்கம் என்பன எப்படி ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் செயல்படுகின்றது என்பதையும் மனித உறவுகளுக்கு இடையிலான போராட்டத்தையும் உணர்வுபூர்வமான கதையோடு சமூக கருத்தை இணைத்து சொல்லும் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நூறு சாமி படம் எப்படி என்பது தொடர்பான விமர்சனத்தையும், மக்கள் அளித்த விமர்சனங்களையும் விரிவாக பார்ப்போம்.
இந்த படத்தின் கதையில், சிறுவயதிலேயே கணவனை இழந்த சுவாசிகா தனது இரு மகன்களையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். ஒருகட்டத்தில் மறுமண ஆசை உருவாகும் நிலையில், பிள்ளைகள் அதை எதிர்க்கின்றனர். பின்னர் அவர்களின் வாழ்க்கை மாற்றமடைய, தாயின் ஆசையை புரிந்து கொண்டு திருமணத்திற்கு உதவுகிறார்கள்.

மகன்களின் ஒப்புதலுடன் சுவாசிகா விஜய் ஆண்டனியை சந்தித்து இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறார். ஆனால் ஊர் மக்கள் “மானம் போயிடும்” என்று கூறி திருமணத்தை நிறுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன் பின் திருமணம் நடந்ததா இல்லையா என்பதே கதையின் மீதம்.
படம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, ''முழுக்க காமெடிதான் படம், நல்லா சிரிச்சோம்… ஆனா லாஸ்ட்ல அந்த வெடிகுண்டு சீன் எல்லாம் செம டென்ஷன்” என்று சிலர் தெரிவித்தனர்.
மற்றொரு பார்வையாளர்கள் கூறுகையில், “குடும்பத்தோட போய் பார்க்கலாம், நல்லா தான் இருக்கு… பழைய ஸ்டைல் காமெடி டிராக் மாதிரி இருக்கு” என கூறினர்.
மேலும் சிலர், “எமோஷன் சீன்ஸ் நல்லா இருந்துச்சு… ஆனா சில இடத்துல காமெடி திணிச்ச மாதிரி இருந்துச்சு” என்று விமர்சித்தனர்.

விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றம் போல வந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவரது நடிப்பு அமைதியான ஆனால் தாக்கம் உள்ளதாக அமைந்துள்ளது.
சுவாசிகா தனது கதாபாத்திரத்தில் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சில காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டைப் பெறுகிறது.
கருணாஸ், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக பதிவு செய்துள்ளது. இசை சில இடங்களில் மனதை வருடுகிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், “அம்மாவையும் அவரின் ஆசைகளையும் மதிக்க வேண்டும்” என்ற கருத்தை சொல்ல முயற்சிக்கிறது. ஆனால் சில இடங்களில் காமெடி மற்றும் எமோஷன் சரியாக சமநிலைப்படவில்லை என்ற விமர்சனமும் எழுகிறது.
மொத்தத்தில், குடும்பத்தோட பார்க்கக்கூடிய ஒரு எமோஷனல் காமெடி முயற்சி என்று சொல்லலாம்.
Listen News!