ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முதலில் செப்டம்பர் 25ஆம் தேதி ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 2ஆம் தேதி ‘அன்பில் அவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருப்பதால், அந்த வார இறுதியை பயன்படுத்தி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் அதிகளவிலான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடிப்பதால், இப்படம் இளம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான இந்த புதிய அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!