• Sep 28 2026

சூரியின் ‘மண்டாடி’க்கு இப்படியொரு வரவேற்பா.? லீக்கான மொத்த வசூல் விபரம் இதோ.!

shali / 44 minutes ago

Advertisement

Listen News!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து வரும் சூரி, தனது வித்தியாசமான கதைத்தேர்வுகளால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கியுள்ளார். ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சூரியுடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஹாஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதை, சூரியின் நடிப்பு மற்றும் கடலோர வாழ்வியலை மையமாகக் கொண்ட காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளன. இதன் காரணமாக வெளியானது முதல் படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகளவில் ரூ.131 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படும் ‘மண்டாடி’, தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.78.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பு இருப்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement