• Sep 24 2026

புகழ், பணம் எதுவுமே நிலைக்காது..100 ஆண்டுகளுக்கு பிறகு என்ன மிஞ்சும் தெரியுமா? - ஆதி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி, வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் மனிதர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் பணம், புகழ், அந்தஸ்து என பலவற்றைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், காலம் கடந்த பிறகு இவை அனைத்தும் எந்த அளவுக்கு நம்முடன் இருக்கும் என்பது கேள்விக்குறியே... இதனை சுட்டிக்காட்டும் வகையில் ஹிப்ஹாப் ஆதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் கூறியதாவது, “நம்மையெல்லாம் 100 வருடம் கழித்து யாரும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். நாமெல்லாம் காலத்தின் கழிவுகள் தான். மிகப்பெரிய ராஜ்ஜியங்களை ஆண்டவர்களையே காலம் கடந்த பிறகு மக்கள் மறந்துவிடுகிறார்கள்.

நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நாம் செய்த சில நல்ல செயல்கள் மட்டும் மற்றவர்களின் நினைவில் இருக்கலாம். அதனால், நாம் வாழும் காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதேபோல், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் உதவி செய்து அவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் இந்த கருத்து, வாழ்க்கையில் எதை முக்கியமாக பார்க்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. புகழும், செல்வமும் நிரந்தரமானவை அல்ல என்றாலும், ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவியும், ஏற்படுத்தும் நல்ல தாக்கமும் நீண்ட காலம் நினைவில் நிற்கக்கூடும் என்பதையே அவரது கருத்து வலியுறுத்துகிறது.

Advertisement

Advertisement