• Oct 23 2026

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர் எடுத்த முடிவு.! ஷாக்கில் ரசிகர்கள்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாகவும், பல்வேறு திருப்பங்களுடனும் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு, மோதல், சண்டை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் என நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் எதிர்பாராத திருப்பமாக ரூ.5 லட்சம் Money Box அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு, நிகழ்ச்சியின் போக்கையே மாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

இந்த Money Box-ஐ எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர், ரூ.5 லட்சம் தொகையை பெற்றுக்கொண்டு தனது பிக் பாஸ் பயணத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வாய்ப்பை போட்டியாளர் குமரன் தேர்வு செய்துள்ளார். ரூ.5 லட்சம் Money Box-ஐ எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற அவர் முடிவு செய்த நிலையில், அவருடன் இருந்த சக போட்டியாளர்கள் இந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தனது முடிவில் உறுதியாக இருந்த குமரன், மற்றவர்களின் வேண்டுகோளையும் மீறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் குமரனின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அவரது இந்த திடீர் முடிவு வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியதுடன், உணர்ச்சிகரமான தருணமாகவும் மாறியுள்ளது. குமரன் எடுத்த இந்த முடிவு குறித்து ரசிகர்கள் மத்தியிலும் தற்போது பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.


Advertisement

Advertisement