• Sep 29 2026

ரஜினியுடன் பழகிய பிறகு இப்படியொரு மாற்றமா..? நடிகை ராஷி கன்னா ஓபன்டாக்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பது பல நடிகர், நடிகைகளுக்கும் மறக்க முடியாத அனுபவமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், நடிகை ராஷி கன்னாவும் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ராஷி கன்னா தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து ‘தர்மன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அனுபவம் குறித்து ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் உரையாடியபோது, “தலைவருடன் வேலை பார்த்தது எப்படி இருந்தது?” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராஷி கன்னா, ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் தனது நண்பராகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “நான் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டாலும், ரஜினிகாந்த் எப்போதும் புன்னகையுடன் பொறுமையாக பதிலளிப்பார். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம். அவ்வப்போது என்னைக் கேலி செய்து சிரிக்க வைப்பார். எனக்கு மிகவும் பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர்...” என ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஜினிகாந்தை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராஷி கன்னாவின் இந்தப் பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement